கோப் குழுவின் தலைவராக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோப் குழுவின் உறுப்பினர்களின் பரிந்துரைகளுக்கு அமைவாகவே, இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கோப் குழுவில் ரவூப் ஹக்கீம், சுஜீவ சேனசிங்க, கலாநிதி ஹர்ஷ டி சில்வா, அஜித் பீ. பெரேர, வசந்த அலுவிகார, ரஞ்சன் ராமநாயக்க, அசோக் அபேசிங்க, அநுர பிரியதர்சன யாப்பா, லக்ஸ்மன் செனவிரத்ன, சந்திரசிறி கஜதீர, மஹிந்தானந்த அளுத்கமகே, தயாசிறி ஜயசேகர, ரவீந்திர சமரவீர, மவை சேனாதிராசா மற்றும் ஜயந்த சமரவீர ஆகிய 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment